பூலோகம் வைகுண்டம் என்று போற்றப்படுவதும் வைணவ தளங்களில் முதன்மையானது என்று பக்தர்களால் நம்பப்படக்கூடிய திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலின் கோபுரங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணியை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்