சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே காட்டம்பூரில் அருள்மிகு ஸ்ரீ தர்மபுல்லணி அய்யனார் கோயில் உள்ளது. கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், பஞ்சம் போக்க தான்தோன்றியவர். நூற்றாண்டுகளாக வணங்கப்படும் இவருக்கு, 25 ஆண்டுகளாக கட்டப்பட்ட புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 68 சிலைகளுடன் ராஜகோபுரமும், 84 சிலைகளுடன் மூலவர் கோபுரமும் அமைந்துள்ளன. ஆகஸ்ட் 29 முதல் நடந்த விழாவில், 60 அடி நீள யாகசாலையில் 80 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் குடமுழுக்கு நடத்தினர்