தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து பக்தர்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.