கலக்கப்போவது யாரு புகழ்பெற்ற காமெடி நடிகர் பாலா நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சி.கே.சி திரையரங்கில் பாலா ரசிகர்கள் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். திரையரங்கில் வைக்கப்பட்டு இருந்த பாலாவின் திரைப்பட பேனருக்கு பாலாவின் ரசிகர்கள் பால் ஊற்றி பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.