இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை யொட்டி தேசிய விளையாட்டு நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (PEFI), ரோட்டரி அமைப்புகள் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர்.