ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைச்சாலையில் கடந்த 2016ஆம் ஆண்டு கார் ஓட்டுநரை கொலை செய்து அவரிடமிருந்து கார் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் இரண்டு பேருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மூன்று ஆண்டுகள் கடும்ங்காவல் தண்டனையும் வழங்க வேண்டும் என திருப்பத்தூர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி மீனாகுமாரி இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.