வேடசந்தூர் அருகே உள்ள முருநெல்லி கோட்டையை சேர்ந்த பி எட் பட்டதாரி இளைஞர் சக்தி முனியப்பன். தற்பொழுது ஐஸ்கிரீம் கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் மனோஜ் குமார். அவரது காதலி பேச மறுத்ததால் அதற்கு காரணம் சக்தி முனியப்பன் தான் என்று நினைத்து பட்டாகத்தியை எடுத்து வந்து அவரது தலையில் வெட்டி விட்டு மனோஜ் குமார் தலைமறைவாகிவிட்டார். தலையில் படுகாயம் அடைந்த மனோஜ் குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.