சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் 14 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புதுப்பட்டி குளத்தில் கரைக்கப்பட்டன. 3 முதல் 10 அடி உயர சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திமுக சேர்மன் கோகிலாராணி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மேளதாளங்கள், குத்துப் பாடல்களுடன் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, இரவு 11 மணிக்கு குளத்தில் கரைக்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.