ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியிலுள்ள ரோஜாபாய் திருமண மண்டபத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலவை பேரூர் செயலாளர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்து கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ராணிப்பேட்டை மாவட்ட வருகை குறித்து அதிமுக வட்ட செயலாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.