தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செங்குளம் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பாலகுட்டையை சேர்ந்த தினேஷ், மணப்பாறையை சேர்ந்த மோகன் மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்