வடுகமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (மாற்றுத்திறனாளி) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தங்களது ஆவணங்களை கொடுத்து மூன்று லட்சம் பணத்தை மாதம் 7400 ரூபாய் வீதம் 84 மாதங்கள் கட்ட வேண்டும் என்ற இந்த நிபந்தனையுடன் பணத்தை பெற்றுள்ளார்.இந்த நிலையில் இதுவரை 71 மாதங்கள் 5 லட்சத்து 25 ஆயிரம் வரை கட்டியுள்ளதாகவும் இதற்கு மேல் தன்னால் கட்ட முடியாது வாங்கிய பணத்தை விட அதிகமாக கட்டி விட்டேன் ஆனால் நிதி நிறுவனம் இன்னும் 13 மாத தவணைகளை கட்ட வேண்டும் என மிரட்டல் விடுப்பதாக கூறி ஜாகிர் உசேன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்