சின்ன கசிநாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி தொடங்கி வைத்தார்.இதில் சின்ன கசிநாயக்கன்பட்டி மற்றும் பெரிய கசிநாயக்கம் பட்டி பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது மனுக்களை கொடுத்தனர்.இந்த முகாமில் 13 க்கும் மேற்பட்ட துறைகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றது பெறப்பட்ட மனுக்களை 45 நாட்களுக்குள் நடவடிக்கை காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் சில நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.