நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மகள் விவேக பிரபா கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளமடம் அண்ணா நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 29ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ந்த உறவினர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர் இருப்பினும் விவேக பிரபா கிடைக்கவில்லை இது குறித்த புகாரில் ஆரல்வாய் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்