கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின் புத்தூர் விஸ்வநாதன் நகர் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் காளிராஜ் இவரும் இவரது மனைவி லட்சுமி அம்மாளும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்காக சென்று விட்டு வெள்ளிக்கிழமை காலை ஊர் திரும்பினர். அப்பொழுது வீட்டில் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்தது மேலும் பீரோவில் இருந்த லாக்கரை உடைத்து பொருட்கள் சிதறி கிடந்தது. திருட வந்த மர்ம நபர்கள் வீட்டில் எதுவும் இல்லாததால் தப்பிச் சென்றனர்.