பழனி அருகே எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். 15 துறைகள் மூலம் 46 சேவைகளுக்கு பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை உடனடியாக தீர்வு காணப்பட்டது. பிற மனுக்கள் 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.