நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சியை சேர்ந்த கிராமமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பச்சூர் சென்றாய சுவாமி ஆலயத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தங்கள் பகுதிக்கு சரியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும் 7 கிலோமீட்டர் தொலைவில் முகாம் வைத்ததால் முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியவில்லை எனக்கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு இன்று பிற்பகல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.