சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட மன்னர் நடுநிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் ஏராளமான திமுகவினர் மட்டும் அரசு அதிகாரிகள் இன்று கலந்து கொண்டனர்