சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வகுமார், உடல் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு 36 இலவச சீருடைகள் வழங்கி மதிய விருந்து பரிமாறினார். மாணவர்களின் தேவைகளை விசாரித்து, இரண்டு உடைகள் வீதம் வழங்கி உபசரித்தார். மாணவர்கள் அவரை பாராட்டி, குடும்பத்திற்கு பிரார்த்தனை செய்து நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.