திருச்சி தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் நீண்ட நாட்கள் ஆக மதுப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திடீரென இவர் குடிபோதையில் வீட்டில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார்.