ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் திடீரென சுமார் 200 மீட்டர் கடல் நீர் உள் வாங்கியுள்ளதால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நிற்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன.