திண்டுக்கல், நல்லாம்பட்டி, பெருமாள்கேவில்பட்டியை சேர்ந்த செல்வகணேஷ் என்பவரின் நெறஞ்சமனசு ராமு ஜல்லிக்கட்டு காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றது. இந்நிலையில் இந்த காளை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து பெருமாள் கோவில் பட்டியில் உள்ள தோட்டத்தில் ஆன்மீகப் பெரியோர்கள் சாதுக்கள் தலைமை பூஜை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.