திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முருகானந்தம் போட்டியிடுகிறார், இன்று அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சாமுண்டிபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தார்.