திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி சிட்கோ பகுதியில் உள்ள தனியார் லாரி புக்கிங் ஆபீஸ் நிறுவனத்தில் தமிழக சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும் தமிழக சுமைப்பணி தொழிலாளர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது