அனைவருக்கும் பழைய பென்சன் , வாரிசு பணி கல்வி அடிப்படையில் பெற்றிட, குறைந்த பட்ச பென்சன் ரூ 7850 வழங்கிய வலியுறுத்தியும் ஒய்வு பெற்றோருக்கு ஒய்வு கால பண பலன் , மற்றும் மருத்துவ காப்பீடு ஒப்பந்தப்படி ஓய்வூதிய உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு சார்பில் பணியில் இருப்போர் மற்றும் ஒய்வு பெற்றோர் இணைந்து கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் 13 வது நாளாக நடைபெற்று வருகிறது.