நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை கன்னியாகுமரி நகராட்சி வளாகம், இரணியல் பேரூராட்சிக்கு கண்ணாட்டுவிளை அரசு மேல் நிலைப்பள்ளி, பாகோடு பேரூராட்சிக்கு திக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, மருதன்கோடு ஊராட்சிக்கு கழுவன் திட்டை புனித மார்டின் டி போரஸ் தேவாலய திருமண மண்டபம், மெதுகும்மல் ஊராட்சிக்கு பால்குளம் சிஎஸ்ஐ சமுக நலக்கூடம், தெள்ளாந்தி ஊராட்சிக்கு முடங்கன் விளை கைத்தறிக்கூடம் ஆகிய இடங்களிலும் முகாம்கள் நடைபெற உள்ளது.