ஜோலார்பேட்டை அடுத்த புளியங்கொட்டை பகுதியைச் சேர்ந்த பூபதி இவரும் அவருடைய நண்பரான முருகன் ஆகிய இருவரும் தமலேரிமுத்துர் மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கீழே இறங்கி திருப்பத்தூர் நோக்கிச் சென்றனர். பூபாலன் என்பவர் திருப்பத்தூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான பேருந்து எடுத்துக்கொண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பூபதி மற்றும் முருகன் ஆகிய இருவரும் தனியார் பேருந்து மீது மோதியதில் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். பூபதி உயிரிழந்தார் மேலும் முருகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.