திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் தோரணம்பதி ஊராட்சியில் இன்று தோரணம்பதி, சின்னாரம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான தமிழக முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.