ஓசூரில், ஏசியன் கிறிஸ்டியன் சமையல் மற்றும் வேளாண் அறிவியல் கல்வி நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டு தேசிய அளவிலான "மலரும் சமையல் கலைஞர்கள் - சீசன் 2" என்ற பெயரில் சமையல் கலை போட்டி நடைபெற்றது. 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 15 சமையல் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.