கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு திரி குழாய்கள் தயாரித்து பட்டாசு ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக கழுகுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கழுகுமலை எஸ்ஐ துரைசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு திரி குழாய்கள் தயாரித்து பட்டாசு ஆலைகளுக்கு விற்பதை அறிந்து சுற்றி வளைத்தனர். இதில் சண்முகசுந்தரம், செந்தில்குமார், செல்வி ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்