பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது, விழாவை முன்னிட்டு பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது, விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகத்தில் பிரம்மதேசம் ,வாலிகண்டபுரம், பெரம்பலூர் ,வெப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்