சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் கடந்த வருடம் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்டார். அப்போது காவலரை திட்டியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கு விசாரணை இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு வந்தது.