திருப்பத்தூர் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெங்காளபுரம் வழியாக பொம்மிகுப்பம் ஊராட்சி ஏழருவி வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த அரசு பேருந்தில் அதிகளவில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் ஏழருவி வரை செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி மரண பிடியில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.