இன்று சந்திர கிரகணத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதி கோவில்களின் நடைகள் அடைக்கப்பட்டன. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.27 வரை நீடிக்கும் அரிய முழு சந்திர கிரகணத்தில், சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதனால் சேவுகப்பெருமாள் அய்யனார், மகா முத்துவராகி அம்மன், ஸ்ரீராமர், சிவபுரிபட்டி சுயம் பிரகதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்கள் மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டன. பக்தர்கள் இன்றி கோவில்கள் வெறிச்சோடின.