திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது, கார் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னையில் வாடகைக்கு கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். தென்காசியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது