ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பெருமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் தனியார் மருத்துவமனை ஊழியர் ஜெகன்ரோஹித் 23. இவர் இன்று தனக்கு சொந்தமான கே.டி.எம்., பைக்கில் திருவள்ளூர் ஈக்காடு அருந்ததிபுரத்தை சேர்ந்த தியாகராஜன் 18 என்பவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். திருவாலங்காடு அடுத்த கூடல்வாடி சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில் ஜெகன்ரோஹித் சம்பவ இடத்திலே பலியானார் அவருடைய நண்பர் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்