கொரட்டி கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - எம்எல்ஏ - பக்தர்கள் சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கொரட்டி கிராமத்தில் இன்று அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா ஊர்பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு விழாவை நடத்தினார். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.