சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. "நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை" தலைப்பில் 100 ஆசிரியர்கள் பங்கேற்றனர். முனைவர் கோபிநாத் தலைமையில், முருகன் பயிற்சியை துவக்கினார். நீர் பாதுகாப்பு, நோய்கள், சுகாதாரம் குறித்து வல்லுநர்கள் விளக்கினர். சாஸ்தா சுந்தரம் நன்றி கூறினார்.