தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பிஎப் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தூய்மை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சுடலைமணி தலைமையில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த திரளான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.