ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் மூன்றாம் தேதி காலை விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டு செல்கிறார். பின்னர் ஸ்ரீரங்கம் கோவில் வருகை தருகிறார் அதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகை நடந்தது