திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் மணலி விரைவு சாலையில் ஷெரின் என்ற இளம் பெண் தனது தாயார் சாராவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி தாய் மற்றும் மகள் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் போக்குவரத்து போலீசார் இது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்