ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு விடுமுறை என்பதால் சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சில சுற்றுலா பயணிகள் சென்றதால் அதனை தடுப்பதற்காக சுற்றுலா சூழல் காவலர் ருத்ரமூர்த்தி தடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள் 2 பேர் ருத்ர மூர்த்தியை தாக்கியதில் அவருக்கு முகம் மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. முகத்தில் மூன்று தையல் போட்ட நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ருத்ரமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார்.