சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவியதால், பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளித்தல் மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை பெரியகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொடங்கின. இதனால் நோய் பரவல் குறையும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.