நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஆத்தூர்குப்பம் பனந்தோப்பு பகுதியில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இன்று மாலை இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற ரமேஷ் என்பவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ரமேஷ், சந்தோஷ் ஆகி இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து நாட்றம்பள்ளி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.