நத்தம் அருகே உள்ள துலாநதி நீரோடையில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபடுவதாக கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சப்இன்ஸ்பெக்டர் ரூகன் தலை மேலான கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த இடத்தில் டிப்பர் லாரி மற்றும் பதிவு எண் இல்லாத ஜெசிபி எந்திரத்தை விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். பின்னர் ஜெசிபி எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்கந்திலி போலீசார் வழக்கு பதிவு தலைமறைவான ஓட்டுநர்கள் மாரியப்பன் சூர்யா மற்றும் டிப்பர் லாரி உரிமையாளரான திருப்பதியை தேடி வருகின்றனர்