விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திண்டுக்கல்லில் இந்து தர்மசக்தி & பாரத் சேனா சார்பில் 5-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை எதிரே துவங்கிய விநாயகர் ஊர்வலம் மநகராட்சி ரோடு, கடைவீதி வழியாக கோட்டை குளம் கொண்டு செல்லப்பட்டது. போலீசார் பாதுகாப்போடு கரைக்கப்பட்டது.