கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் செல்வகுமார் என்பவர் உதவி ஆய்வாளராகவும் அதே பிரிவில் இந்திரா காந்தி என்பவர் காவலராகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டு கொண்டனர். இதனால் காவல்துறையில் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹாசி மணி உதவி ஆய்வாளர் செல்வகுமாரையும் எஸ்பி ஆல்பர்ட் ஜான் இந்திரா காந்தியையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்