தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியின் போது அகரம், கருங்கல்பட்டி கல்லறை அருகே பட்டாகத்தியுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர் போலீசார் சுற்றி வளைத்ததும் பட்டாகத்தியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் அகரம், அச்சாம்பட்டியை சேர்ந்த சூர்யா, கார்த்திக் என்றும் சாலையில் செல்பவர்களை பட்டாகத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்தது