ராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக நீர் நிலைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில் ஆற்காடு இளவரசர் நவாப் காலத்தில் கட்டப்பட்ட லாலாபேட்டை ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து உபரி நீரானது வானாபாடி, செட்டித்தாங்கல், அனந்தலை ,உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்பாட்டுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்