முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து மற்றும் தாலுக என்ஜினீயர் சரவணன் ஆகியோர் பின் தொடர்ந்து சென்றபோது அரிசி கடத்திய நபர்கள் வேகமாக சென்று விட்டனர். இது குறித்து பரமக்குடி குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். பரமக்குடி அதிகாரிகள் வாகனத்தை தேடி சென்ற போது அரிசி கடத்திய நபர்கள் சிவங்கை மாவட்டம் இளையான்குடி குமரக்குறிச்சி அருகே உள்ள கண்மாய் அருகே சுமார் 1760 கிலோ அரிசி (39 சாக்கு பை )கொட்டி சென்றுவிட்டனர்