விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வங்கியின் 34வது பேரவை கூட்டம் இணை பதிவாளர் ஜீவா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் வங்கி அலுவலர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விதிக்கப்பட்ட வரியினை முழுமையாக ரத்து செய்து வருமான வரித்துறை அதிகாரி ஆணையிட்டிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதும் பயனுள்ளதாகும் என்று ஜீவா பேசினார்.